இந்திய வேளாண்மை ஆராய்ச்சி குழுமம் (ICAR) வழங்கும் ‘ராஷ்ட்ரிய கிருஷி விஞ்ஞான் புரஸ்கார்’ (RKVBP) விருதுக்கான பரிந்துரைகளை உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகள் அனுப்ப வேண்டும் என UGC அறிவுறுத்தியுள்ளது.
விருது பிரிவுகள்:
- வேளாண்மை மற்றும் தொடர்புடைய அறிவியல் துறையில் புதுமை மற்றும் தொழில்நுட்பம்.
- ஆராய்ச்சி முன்னேற்றம்.
- சிறந்த இடைநிலைக் குழு ஆராய்ச்சி.
- சிறந்த பெண் விஞ்ஞானி.
- சிறந்த இளம் விஞ்ஞானி.
வலைத்தள பதிவு: பரிந்துரைகள் ஜனவரி 1 முதல் மார்ச் 31-ம் தேதி வரை https://awards.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
UGC பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு, தங்கள் ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு இந்த தகவலைத் தெரிவிக்க வேண்டும் என கூறியுள்ளது.