புதுடில்லி: அரபிக்கடலில் தாக்குதலுக்குள்ளான சரக்கு கப்பலில் பயணித்த 24 இந்திய மாலுமிகளை ஓமன் கடற்படை பத்திரமாக மீட்டது.
இஸ்ரேல் – ஈரான் மோதல் சூழ்நிலை நீடித்து வரும் நிலையில், அரபிக்கடலில் சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பல் ஒன்று தாக்குதலுக்குள்ளானது.
மார்ஷல் தீவு அருகே பயணித்த அந்த கப்பலில் 24 இந்திய மாலுமிகள் இருந்தனர். தாக்குதலால் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து அவசர உதவி கோரிய நிலையில், அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த ஓமன் கடற்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அனைத்து இந்திய மாலுமிகளையும் பாதுகாப்பாக மீட்டனர்.
இந்த தாக்குதல் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.