பிரேசில்: 2 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த போதைப்பொருள் கடத்தல் மன்னன் மனைவியின் இன்ஸ்டாகிராம் பதிவால் கைது செய்யப்பட்டுள்ளான்.
பிரேசிலில், 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த போதைப்பொருள் கடத்தல் மன்னனை, அவனது மனைவியின் இன்ஸ்டாகிராம் பதிவுகளை வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.
விமானியாக இருந்து போதைப்பொருள் கடத்தல் மன்னனாக மாறிய ரொனால்டு என்பவன், தனது இரண்டாவது மனைவி அன்ட்ரேஸா உடன் சவுதி, மாலத்தீவு, பிரான்ஸ் போன்ற நாடுகளை சொந்த விமானத்தில் சுற்றிவந்ததாக கூறப்படுகிறது.
அங்கு எடுத்த புகைப்படங்களை அன்ட்ரேஸா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துவந்த நிலையில், அதில் உள்ள லொகேஷனை வைத்து, பிரேசிலின் குவாருஜா நகரில் பதுங்கியிருந்த ரொனால்டை போலீசார் கைது செய்தனர்.
5 ஆண்டுகளுக்கு முன், அவனது முதல் மனைவி சமூக வலைத்தளத்தில் பதிவேற்றிய புகைப்படத்தை வைத்து, போலீசார் ஏற்கனவே ஒரு முறை அவனை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.