துபாய்: துபாய் ஆட்சியாளரின் மகள் ஷேக்கா மஹ்ரா, தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டதாக சமூக வலைதளங்களில் அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு ஆசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள துபாயின் ஆட்சியாளராக இருப்பவர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம். இவரது மகள் ஷைகா மஹ்ரா. இங்கிலாந்தில் வெளிநாட்டு உறவுகள் தொடர்பான படிப்பில் பட்டம் பெற்றார்.
இவருக்கும் துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஷேக் மனா பின் முகமதுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இரண்டு மாதங்களுக்கு முன் குழந்தை பிறந்தது. இந்நிலையில் துபாய் இளவரசி மஹ்ரா தனது கணவரை விவாகரத்து செய்வதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார்.
அந்த பதிவில், ‘அன்புள்ள கணவரே, நீங்கள் மற்றவர்களுடன் நேரத்தை செலவிடுவதால் நான் விவாகரத்து அறிவிக்கிறேன். இப்படிக்கு உங்கள் முன்னாள் மனைவி’ என குறிப்பிட்டுள்ளார். இளவரசி மஹாராவின் பொது விவாகரத்து அறிவிப்பு துபாயில் பரபரப்பாக பேசப்படுகிறது. மேலும், இருவரும் ஒன்றாக இருப்பது போல் சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்த புகைப்படங்களை நீக்கியுள்ளனர். ஒருவரையொருவர் பிளாக் செய்துஉள்ளனர்.