கிரீஸ்: குவியும் சுற்றுலாப்பயணிகள்… கிரீஸ் நாட்டு சுற்றுலா மையமான சாண்டோரினி தீவில் சுற்றுலா பயணிகள் குவிகின்றனர்.
கிரீஸ் நாட்டுக்கு சொந்தமான சுற்றுலா மையமான சாண்டோரினி தீவுக்கு பன்னாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள ஏஜியன் கடலில் அமைந்துள்ள சாண்டோரினி தீவு கரடுமுரடான நிலப்பரப்பை கொண்டுள்ளது.
வெள்ளையடிக்கப்பட்ட கனசதுர வீடுகள் கொண்ட தீவில் இருந்து கடற்கரை அழகை காணும் வகையில் குன்றுகளின் உச்சியில் குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. 20 ஆயிரம் மக்கள் தொகையை கொண்ட தீவுக்கு பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் ஒரே நாளில் வருகை தருவதால் உள்ளூர் மக்கள் பாதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.