சாண்ட் சா ரோஷன் செஹாரா என்ற இந்தி படத்தின் மூலம் தமன்னா அறிமுகமானார். அதன் பிறகு கேடி படத்தின் மூலம் தமன்னா தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் கல்லூரி, அயன் படங்களின் மூலம்தான் அவருக்கான கவனம் வந்தது. அதன்பிறகு முன்னணி நடிகர்களின் படங்களில் அடுத்தடுத்து நடித்து உச்ச நடிகையானார்.
ஆனால் புது ஹீரோயின்கள் வந்த பிறகு ஒரு கட்டத்தில் தமன்னாவுக்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. தற்போது அவருக்கு பாலிவுட் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. பாலிவுட்டில் ஜி கர்தா மற்றும் லஸ்ட் ஸ்டோரிஸ் 2 ஆகிய படங்களில் தொடர்ந்து நடித்துள்ளார். சமீபகாலமாக மும்பையில் தங்கி பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
சினிமாவின் தற்போதைய நிலை குறித்து பேசிய அவர், “ஒரு காலத்தில் திரையரங்குகளில் மட்டுமே சினிமா திரையிடப்பட்டது. தற்போது OTT லும் பார்க்க ஆரம்பித்துவிட்டனர். இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் ரசிகர்கள் ரீல்களை பார்த்து பழகி வருகின்றனர். அது கடினமாகி வருகிறது. நடிகர்கள் மற்றும் நடிகைகள் தங்களை ஈர்க்கும் வகையில் நடிப்பதற்காக, ரீலிஸ் வீடியோக்கள் நடிகர்களுக்கு போட்டியாக மாறி வருகிறது.