சென்னை: வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கில் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்வதற்காக பல்லாவரம் திமுக எம்எல்ஏவின் மகன் மற்றும் மருமகள் ஆகஸ்ட் 9ம் தேதி நேரில் ஆஜராகுமாறு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன், மருமகள் மெர்லினா ஆகியோரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வீட்டுப் பணிப்பெண்ணை துன்புறுத்தி சித்ரவதை செய்ததாக நீலாங்கரை போலீஸார் கைது செய்தனர். பின்னர் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த வழக்கில், அந்தோ மதிவாணன், மெர்லினா ஆகியோருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை நகல் ஏற்கனவே வழங்கப்பட்டது. இந்த வழக்கில், குற்றப் பதிவுக்காக இருவரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.