சென்னை: தாலி சரடு மாற்றிக்கொள்ள உகந்த நாள் எது தெரியுமா? தாலிக்கயிறு மாற்றும்போது, கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்ன தெரியுமா? தாலி என்கின்ற புனிதநூல் இந்துக்களின் திருமண பந்தத்தின் அடையாளமாக விளங்கி கொண்டிருக்கிறது.. பொதுவாக தாலியில், சிவபெருமானின் திருவுருவம் வைத்தால் மூன்று கிடைமட்ட கோடுகளையும், கடவுள் விஷ்ணுவின் திருவுருவம் என்றால் 3 செங்குத்தான கோடுகளைகொண்டும் வடிவமைக்கப்படுகிறது.
ஆச்சரியம்: அத்துடன் ஏராளமான ஆச்சரியமூட்டும் விளக்கங்களுடன் நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. தாலி அணிவது, பெண்களின் ரத்த ஓட்டத்தை சரிசெய்கிறது. பெண்களின் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. அதனால்தான், தாலியை மறைத்து உடலோடு ஒட்டி உரசும்படி அணிய வேண்டும் என்கிறார்கள் பெரியோர்கள்.
முதலில் மஞ்சள் கயிற்றில்தான் தாலி அணிவிக்கப்படுகிறது.. மஞ்சள் ஒரு இயற்கை என்டிபயோட்டிக் கிழங்காகும்.. புற்று நோய்க்கு எதிரானது… அதிலும் மார்பக புற்று நோய் வராமல் தடுப்பதில் முக்கிய பங்கு இந்த மஞ்சளுக்கு உண்டு. இதனால், இதய நோய் அபாயமும் குறைகிறது.. வீக்கம் மற்றும் ஆக்சிஜனேற்றத்தை குறைக்கவும் இந்த மஞ்சள் உதவுவதாக ஆய்வுகள் சொல்கின்றன. அதனால்தான், தாலியை தங்கத்தில் அணிந்தாலும் அதனை மஞ்சள் கயிற்றில் கட்ட வேண்டும் என்பதற்கும் இதுவே காரணமாக உள்ளது. ஆடிப்பெருக்கு: இந்த மஞ்சள் தாலி கயிற்றை, வருடம் 2 முறை மாற்றுவார்கள்.. குறிப்பாக, ஆடி பெருக்கு நாளில் தாலி மாற்றுவார்கள்.. புதுமணப்பெண்கள் குடும்பத்தோடு கோயில்களில் வழிபட்டு நீர் நிலைகளில் தாலி கயிறை மாற்றி புதிய தாலி கயிறு மாற்றுவார்கள்… இதன்மூலம்,
தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
அதேபோல, மற்ற நாட்களில் எப்போது தாலி மாற்றலாம்? இதற்கு உகந்த நாள் என்பது எது என்பது குறித்தும் ஆன்மீகத்தில் சொல்லப்பட்டுள்ளது.
கர்ப்பிணிகள்: எப்போதுமே கயிற்றின் நிறம் மங்குவது போல இருந்தால் மட்டுமே மாற்றவேண்டும்.. அதேபோல, ஆனால், கர்ப்பிணிகள் மாற்ற கூடாது… கர்ப்பிணிகள் எப்போதும் பிரசவத்திற்கு பிறகே மாற்ற வேண்டும். தாலியை மாற்ற வேண்டுமானால், திங்கள், செவ்வாய், வியாழக்கிழமைகளில் மட்டும் தான் மாற்ற வேண்டும்.
காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் தாலி மாற்றலாம்.. கோவிலுக்கு சென்று தாலி மாற்றினால் கூடுதல் சிறப்பாகும். தாலிக்கயிறாக இருந்தாலும், தாலி சரடாக இருந்தாலும், அது மாற்றும்பொழுது கிழக்கு நோக்கி உட்கார்ந்தே மாற்ற வேண்டும்… அதேபோல, கணவர் அல்லது சுமங்கலியாக இருக்கும் அம்மா, மாமியார் இப்படி மூத்தவர்கள் உடனிருக்க வேண்டும். தாலிக்கயிறு மாற்ற உட்காரும்போது, அந்த சடங்கு முழுமையாக முடியும்வரை எழக்கூடாது.. பழைய தாலி: புதிய தங்க தாலி அணிந்ததுமே, பழைய கயிற்றை செடி, கொடிகள் இருந்தால் அதில் கட்டிவிடலாம்.. அல்லது கோவிலில் உள்ள மரங்களில் கட்டிவிடலாம். ஆனால், குப்பையில் தூக்கி போடக்கூடாது