திண்டிவனம்: ‘ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும்படி, முதல்வர் ஸ்டாலின் கூறும்போது, மத்திய அரசிடம் கைவரிசை காட்டுகிறார்’ என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கோனேரிக்குப்பம் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் பி.ஏ.எம்.சி., நிறுவனர் ராமதாஸின் 86வது பிறந்தநாளை முன்னிட்டு முப்பெரும் விழா நடந்தது. பா.ம.க., கவுரவ தலைவர் மணி உட்பட பலர் பங்கேற்றனர்.
விழாவில், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: தமிழகத்தில் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம்.
முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன்.நானும் உங்களை விட்டால் யார் செய்வார்கள் என்று கூறினேன். அதற்கு ஸ்டாலினும் தலையாட்டினார். இன்னும் இரண்டு மாதத்தில் இடஒதுக்கீடு பற்றி தமிழக மக்கள் பேசுவார்கள்.
ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று செயல்தலைவர் ஸ்டாலினிடம் கேட்டபோது, மத்திய அரசை சுட்டிக்காட்டுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.