வாஷிங்டன்: பார்க்க வேண்டிய மிகவும் ஆபத்தான நகரங்கள் என 3 நகரங்களை போர்ப்ஸ் பத்திரிக்கை அறிவித்துள்ளது. பாகிஸ்தானின் கராச்சி நகரம் 2வது இடத்தில் உள்ளது.
குற்றம், வன்முறை, பயங்கரவாத அச்சுறுத்தல்கள், இயற்கை பேரிடர்கள், பொருளாதார சீர்குலைவு போன்றவற்றால் சுற்றுலா பயணிகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தல் அடிப்படையில் போர்ப்ஸ் இதழ் 3 ஆபத்தான நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
100 புள்ளிகள் அடிப்படையில் வெனிசுலாவின் கராகஸ் முதலிடத்தில் உள்ளது. நகரம் 100 புள்ளிகளைப் பெற்றுள்ளது. கராச்சி நகரம் 93.12 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது.
மியான்மர் தலைநகர் யாங்கூன் 91.67 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. இவ்வாறு பட்டியலில் கூறப்பட்டுள்ளது. கராச்சிக்கு செல்பவர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது என்று பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.