முகேஷ் அம்பானியின் மனைவியான நீத்தா அம்பானி, உலகின் மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவராக உள்ளார். ஆனால், திருமணத்திற்கு முன்பு அவரது வாழ்க்கை மிகவும் எளிமையானதாக இருந்தது.
நீத்தா அம்பானி தனது 6வது வயதிலேயே பரதநாட்டியம் பயிற்சி பெறத் தொடங்கினார். ஒரு நடன கலைஞராகப் பணி செய்தும், ஒரு சிறிய பள்ளியில் நடன பயிற்றுவிப்பாளராகவும் பணியாற்றினார். 1985ம் ஆண்டு முகேஷ் அம்பானியுடன் திருமணம் செய்து கொண்ட பிறகு, தாம் திருமணத்திற்குப் பிறகு கூட தனது நடன திறமைகளை காக்க மாதம் 800 ரூபாய் சம்பளத்திற்கு வேலை செய்ததாக நீத்தா அம்பானி கூறியுள்ளார்.
திருமணத்திற்கு முன்பு, நீத்தா அம்பானியின் மாமனார் திருபாய் அம்பானி அவரைப் பார்த்து,
எனது மகன் முகேஷ் அம்பானியை திருமணம் செய்து கொள்ள சம்மதிப்பீர்களா என்று கேட்டதற்கு, திருமணத்திற்கு பிறகும் எனது பணியை தொடர அனுமதிக்க வேண்டும் என்பதே அவரது ஒரே கோரிக்கை. திருபாய் அவளது விருப்பத்தை நிறைவேற்றி, அதன் பிறகு தான் முகேஷை திருமணம் செய்து கொள்ள சம்மதித்தாள்.
ஒரு பேட்டியில் பேசிய நீத்தா, திருமணத்திற்கு பிறகும் செயின்ட் ஃப்ளவர் நர்சரியில் ஆசிரியையாக பணிபுரிந்தேன். கோடீஸ்வர குடும்பத்தில் திருமணம் செய்து கொண்டாலும், அந்த நேரத்தில் தனது நடனத் திறனைப் பேணுவதற்காக மாதம் 800 சம்பளத்திற்கு பள்ளியில் வேலைக்குச் சென்றதாகவும் அவர் கூறினார்.
இந்த விவரங்கள், இன்று பல கோடிகளுக்கு அதிபதியாக இருக்கிற நீத்தா அம்பானியின் இளம் வயதில் எவ்வாறு எளிமையாக வாழ்ந்தார் என்பதற்கான சாட்சியமாகக் கூறப்படுகின்றன.