ஆந்திரப் பிரதேசத்தில் ஊழியர்களின் இடமாற்றம் செய்ய புதிய வழிகாட்டுதல்களை மாநில அரசு 17 ஆகஸ்ட் 2024 அன்று வெளியிட்டுள்ளது. இந்த வழிகாட்டுதலின்படி, வருவாய், பஞ்சாயத்து ராஜ், நகராட்சி நிர்வாகம், கிராம மற்றும் வார்டு செயலகங்கள், சுரங்கங்கள், சிவில் சப்ளைஸ், அறநிலையத்துறை, வனம், போக்குவரத்து, தொழில்கள், மின்சாரம் மற்றும் வணிக வரிகள், முத்திரைகள் மற்றும் பதிவுகள் உள்ளிட்ட 12 துறைகளில் ஊழியர்களின் இடமாற்றத்தை அரசு ஒப்புத்தளித்து உள்ளது.
ஆகஸ்ட் 19 முதல் 31 வரை இடமாற்றத்திற்கான தடை நீக்கப்படுகிறது, மேலும் மாத இறுதிக்குள் இடமாற்ற செயல்முறைகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், செப்டம்பர் 5 முதல் 15 வரை இடமாற்றம் செய்ய அனுமதி வழங்கி உத்தரவை பிறப்பித்துள்ளது