மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, போதைப்பொருள் வர்த்தகம் உலகளாவிய பிரச்சனை என்று கூறினார். ராய்பூரில் நடந்த நிகழ்ச்சியில், போதைப்பொருளைக் கண்டறிதல், நெட்வொர்க்குகளை அழித்தல், குற்றவாளிகளைக் கைது செய்தல் மற்றும் அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு வழங்குதல் ஆகிய நான்கு கொள்கைகளின் அடிப்படையில் புதிய உத்தியுடன் நாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுவதாக அவர் உறுதியளித்தார்.
போதைப்பொருள் கடத்தல் உலகளாவிய பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் அதற்கு எதிரான போரில் பல நாடுகள் தோல்வியடைந்துள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், எங்கள் போராட்டம் வெற்றிபெற, நான்கு முக்கிய கொள்கைகளை நாம் கடைபிடிக்க வேண்டும், என்றார்.
நாடு சுதந்திரம் அடைந்த நூறாவது ஆண்டான 2047-க்குள் இந்தியாவை போதைப்பொருள் இல்லாத நாடாக மாற்றப் போவதாக பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். அதே நேரத்தில், போதைப்பொருள் வர்த்தகம் நக்சலிசத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் நிதியளிக்கிறது மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை பலவீனப்படுத்துகிறது,” என்று அவர் கூறினார்.
மாநில அரசுகளுடன் இணைந்து, ஒவ்வொரு மாநிலத்திலும் என்சிபியின் கிளைகளை நிறுவுவதற்கான மையத்தின் திட்டத்தை சுட்டிக்காட்டிய ஷா, “நாங்கள் மேல்-கீழ் மற்றும் கீழ்-மேல்’ அணுகுமுறையுடன் செயல்பட வேண்டும்” என்றார்.
2004 முதல் 2014 வரையிலான காலப்பகுதியில் 1,52,000 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகவும், கடந்த பத்து ஆண்டுகளில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களின் அளவு 5,43,000 கிலோவாக அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார். மத்திய அரசின் மோடி முயற்சியால், போதைப் பொருள் ஒழிப்புப் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.