நடிகையும், இயக்குநரும், பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத் தயாரித்த, ‘எமர்ஜென்சி’, மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் விதிக்கப்பட்ட எமர்ஜென்சியை அடிப்படையாகக் கொண்டது. இந்தப் படத்தில் இந்திரா காந்தியாக கங்கனா நடிக்கிறார்.
‘எமர்ஜென்சி’ படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியான நிலையில், படம் செப்டம்பர் 6ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், படத்திற்கு சென்சார் போர்டு சான்றிதழ் வழங்காத விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கங்கனா அளித்த பேட்டியில், “எமர்ஜென்சி’ படத்திற்கு சென்சார் போர்டு சான்றிதழ் வழங்கவில்லை. சான்றிதழ் கிடைக்கும் என நம்புகிறேன். இல்லை என்றால் படத்தைப் பாதுகாக்க நீதிமன்றம் செல்லவும் தயங்கமாட்டேன்.
அவருடைய பேச்சு இத்துடன் நின்றுவிடவில்லை. “மரியாதையான வரலாற்றை மக்கள் முன் காட்ட வேண்டும். இந்திரா காந்தி என்ற 70 வயது மூதாட்டி அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்டார். இதை திரைப்படம் மூலம் காட்ட வேண்டும். வரலாற்றை யாராலும் மாற்ற முடியாது” என்று அவர் கூறினார்.
கங்கனாவின் கருத்துகள் தணிக்கை வாரியத்தின் செயல்பாட்டிற்கு எதிரான வெடிகுண்டு. ‘எமர்ஜென்சி’ திரைப்படம் சந்தித்த தடைகள் அதை மேலும் பரபரப்பாக்குகிறது.