சென்னை: சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு கடந்த சில மாதங்களாக வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வந்தே பாரத் ரயில் சேவையை நிரந்தரமாக தொடங்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி வந்தனர்.
அதன்படி, சென்னை – நாகர்கோவில், மதுரை – பெங்களூரு, மீரட் – லக்னோ இடையே 3 வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று (ஆகஸ்ட் 31) காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.
சென்னை – நாகர்கோவில் ரயில் எழும்பூரில் இருந்து காலை 5 மணிக்குப் புறப்பட்டு பிற்பகல் 1.50 மணிக்கு நாகர்கோவிலை அடைந்து, நாகர்கோவிலில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்குப் புறப்பட்டு புதன்கிழமை தவிர மற்ற நாட்களில் இரவு 11 மணிக்கு எழும்பூரை வந்தடையும்.
இந்த ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி மற்றும் திருநெல்வேலி நிலையங்களில் நின்று செல்லும். 16 பெட்டிகள் கொண்ட இந்திரா ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியது.
நாகர்கோவிலுக்கு ‘ஏசி’ இருக்கை பெட்டியில் பயணிக்க ஒரு நபருக்கு ரூ.1,760 மற்றும் எக்ஸிகியூட்டிவ் கோச்சில் ஒருவருக்கு ரூ.3,240 கட்டணம். அதேபோல், மதுரை-பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் மதுரையில் இருந்து அதிகாலை 5.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 1 மணிக்கு பெங்களூரு கண்டோன்மென்ட்டை சென்றடையும்.
பின்னர் அங்கிருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9:45 மணிக்கு மதுரை சென்றடையும்.
8 பெட்டிகள் கொண்ட இந்திரரயில் திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணராஜபுரம் ஆகிய இடங்களில் நின்று செல்லும். ‘ஏசி’ இருக்கை கோச்சில் பயணிக்க ஒருவருக்கு ரூ.1,575 ஆகவும், எக்ஸிகியூட்டிவ் கோச்சில் பயணிக்க ஒருவருக்கு ரூ.2,865 ஆகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த வந்தேபாரத் ரயில்களை காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெறும் விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இன்று மட்டும் ரயில் சென்ட்ரலில் இருந்து மதியம் 12.30 மணிக்கு புறப்படும். செப்டம்பர் 2-ம் தேதி முதல் எழும்பூரில் இருந்து வழக்கமான சேவை இயக்கப்படும்.