தேவையான பொருட்கள்:
வேகவைத்த பாஸ்தா – 1 கப்
தனியா தூள் – 1 டீஸ்பூன்
நறுக்கிய வெங்காயம், மிளகாய், கேரட் – தலா கால் கப்
கடலை மாவு – கால் கப்
மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி
ரெட் சில்லி சாஸ் – 2 டீஸ்பூன்
அரிசி மாவு – கால் கப்
சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப
நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை:
வேகவைத்த பாஸ்தாவை ஒரு பாத்திரத்தில் போட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய், கேரட், கொத்தமல்லி, கடலை மாவு, அரிசி மாவு, சீரகத்தூள், தனியா தூள், மிளகாய்த்தூள், ரெட் சில்லி சாஸ் மற்றும் உப்பு சேர்த்து நன்கு மசிக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை சிறிது சிறிதாக எடுத்து பக்கோடா போல் எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும். சூப்பர் பாஸ்தா பக்கோடா தயார்.