நடிகர் மம்மூட்டி, ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து தனது மௌனத்தை கலைத்து, உறுதியான கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார். இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்ட ஆலோசனைகள் மற்றும் தீர்வுகளை அவர் முழுமையாக ஆதரிக்கிறார்.
மம்மூட்டி கூறுகையில், இந்த விவகாரம் குறித்து காவல்துறை நேர்மையாக விசாரிக்க வேண்டும் என்றும், நீதிமன்றம் தண்டனைகளை தீர்மானிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அவர் எடுத்துக் கூறிய கருத்துகள் மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. நிறைய நடிகைகள் மம்மூட்டியின் இந்த ஆதரவை பாராட்டியுள்ளனர். மேலும் அவருக்கு உறுதுணையாக இருக்கும் எண்ணத்தை தெரிவித்துள்ளனர்.