மும்பை: நடிகர் அமிதாப் பச்சன் தற்போது சேனல் ஒன்னில் தனது ‘கோன் பனேகா குரோர்பதி’ நிகழ்ச்சியின் 16-வது சீசனை தொகுத்து வழங்கி வருகிறார்.
திருமணமாகாத பெண் குடும்பத்திற்கு சுமை’ என போட்டியாளர் ஒருவர் கூறியதையடுத்து அமிதாப் பச்சன் கோபமடைந்தார்.
நிகழ்ச்சியின் சமீபத்திய எபிசோடில் கிருஷ்ணா செலுகர் என்ற போட்டியாளர் இடம்பெற்றார். கொரோனா காலத்தில் தனது வேலையை இழந்ததால், தனது நிலைமையை திருமணமாகாத பெண்களுடன் ஒப்பிட்டார்.
“திருமணமாகாத பெண் குடும்பத்திற்கு சுமை என்று சொன்னால், குறிப்பிட்ட வயதை எட்டிய பிறகு வேலையில்லாமல் இருக்கும் ஆணும் சுமைதான்.
இதனால் கோபமடைந்த அமிதாப் பச்சன், “உங்களுக்கு ஒன்று சொல்லட்டுமா? ஒரு பெண் ஒருபோதும் குடும்பத்திற்கு பாரமாக இல்லை. அவர் எப்பொழுதும் பெருமைக்குரியவர்.”
அமிதாப் பச்சனின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் காரசாரமான விவாதத்தை கிளப்பியுள்ளது.