நடிகர் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இடையேயான விவாகரத்து சர்ச்சை திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஜெயம் ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆர்த்தியை பிரிந்தது கடினமான முடிவு. இதனால் குடும்பத்தில் பிரச்னையை ஆர்த்தி உருவாக்கி இருக்கலாம் என்ற கருத்து சமூக வலைதளங்களில் பரவியது.
ஆனால் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த முடிவுக்கு எனது ஒப்புதல் இல்லை” என்று கூறுகிறார். மேலும், “கணவரிடம் மனம் திறந்து பேச முயற்சித்தேன் ஆனால் வாய்ப்பு மறுக்கப்பட்டது” என்று வேதனையான சூழ்நிலையையும் பகிர்ந்து கொண்டார்.
தங்களின் 18 ஆண்டுகால உறவு பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையின் அடிப்படையிலானது என்றும் தற்போதைய குற்றச்சாட்டுகள் தன்னையும் தனது குழந்தைகளையும் காயப்படுத்துவதாகவும் ஆர்த்தி கூறினார்.
“கணவன்-மனைவி பிரிவின் பின்னணியில் உள்ள உண்மைகள் நேர்மையாக வெளிவரும்” என்று நம்பிக்கை தெரிவித்த ஆர்த்தி, “என் குழந்தைகள் நலனே எனது முன்னுரிமை” என்றும், இந்த கடினமான சூழ்நிலையில் தங்கள் குழந்தைகளை காயப்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.
ஆர்த்தியின் இந்த அறிக்கை கடந்த சில மாதங்களாக பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.