திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் புரட்டாசி மாத கிரிவலம் செல்ல உகந்த நேரம், 17-ம் தேதி காலை 11.22 மணிக்கு துவங்கி, 18-ம் தேதி காலை 9.04 மணிக்கு முடிவடைகிறது.
எனவே கிரிவலம் செல்ல 17-ம் தேதி இரவு உகந்தது என அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 1400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். பௌர்ணமி தினங்களில் சென்னை மார்க்கத்தில் இருந்து 30 குளிரூட்டப்பட்ட பேருந்துகள் உட்பட 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
மேலும் சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு பௌர்ணமி சிறப்பு ரயில்களும், திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரம் வழியாக சென்னை தாம்பரத்திற்கு சிறப்பு ரயில்களும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.