கடலூர்: கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி சுரங்க விரிவாக்கம் நெய்வேலி என்எல்சி சுரங்க விரிவாக்கத்தில் தோட்டக்கலைத்துறையில் தற்காலிக ஒப்பந்த தொழிலாளர்களாக 80 பேர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், இதில் பணிபுரியும் தற்காலிக ஒப்பந்தத் தொழிலாளர்கள், தங்களுக்கு பணி நிரந்தரம் செய்யக் கோரியும், ஊதிய உயர்வு வழங்கக் கோரியும் பலமுறை போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், இவர்களுக்கு என்எல்சி நிர்வாகம் ஊதிய உயர்வு வழங்காமல், பணி நிரந்தரம் செய்யவில்லை.
இந்நிலையில் ஒப்பந்த தொழிலாளர்கள் இன்று (செப்டம்பர் 18) காலை முதல் இரு சுரங்க நுழைவு வாயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.