*அரிசி மாவில் நான்கு பங்கும், கடலை மாவு ஒரு பங்கும் கலந்து முறுக்கு செய்தால் சுவையாகவும் மொறுமொறுப்பாகவும் இருக்கும்.
*முறுக்கு போன்ற தின்பண்டங்களை பொரிக்கும் போது கடாயின் அடியில் உப்பு தூவி பண்டங்கள் ஒட்டாமல் இருக்கும்.
*பச்சை மிளகாயை வெந்நீரில் போட்டு சிறிது நேரம் கழித்து பயன்படுத்தினால் காரத்தன்மை குறையும்.
* வெந்தயக் குழம்பு கொதித்ததும், இரண்டு உளுந்து அப்பளத்தை பொரித்து நசுக்கி, குழம்பை இறக்கினால் வாசனையாக இருக்கும்.
*வறுத்த நிலக்கடலை, பெருங்காயம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் மற்றும் ஒரு ஸ்பூன் அரிசியை ஒரு கடாயில் வறுத்து பொடி செய்தால் உருளைக்கிழங்கு பொரியலுக்கு கூடுதல் வாசனையும் சுவையும் கூடும்.
*முட்டை கோஸ்ஸை நன்றாக வதக்கி அதனுடன் மிளகாய், உப்பு, புளி சேர்த்து அரைத்தால் சுவையான கோஸ் துவையல் தயார்.
*பொன்னாங்கண்ணி கீரையை வதக்கி, மிளகு, உப்பு சேர்த்து துவையல் போல் செய்யலாம்.
*அரிசி மற்றும் பருப்பின் கீழ் உலர் கறிவேப்பிலையைப் போட்டால் வண்டுகள் வராது.
*தேங்காய் கெட்டுப் போகாமல் இருக்க குளிர்ந்த நீரில் போடலாம். இது மூன்று நாட்கள் வரை நீடிக்கும்.
*தேங்காய், சீரகம், மிளகாய் ஆகியவற்றை அரைப்பதற்குப் பதிலாக, தேங்காய், ஓமம், கடலைப்பருப்பு, மிளகாய் ஆகியவற்றை அரைத்தால், வித்தியாசமான மருத்துவக் கலவை தயார்.
*கோதுமை மாவில் பூச்சிகள் மற்றும் புழுக்கள் வராமல் இருக்க பிரஞ்சி இலைகளை கோதுமை மாவில் போட்டால் ஒன்றும் வராது.