தேனி: தேனி மாவட்டம் பெரியகுளத்தை சுற்றியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் பெரியகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. இரவு 11 மணி வரை மழை நீடித்தது.
பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளாறு ணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் இதே நிலை நீடித்தது. இதனால் மஞ்சளாறு அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 184 கன அடியாக அதிகரித்தது.
ஏற்கனவே அணையின் முழு கொள்ளளவான 55 அடி 57 அடியாக இருந்தது. இந்நிலையில், நீர்வரத்து அதிகரித்துள்ளதால், வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
இதையடுத்து அணைக்கு வரும் தண்ணீர் உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் அணைக்கு வரும் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
எனவே ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு நீர்வளத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.