1. வெள்ளை காராமணி இனிப்பு சுண்டல்
தேவையானவை:
ஊறவைத்து வேகவைத்த வெள்ளை காராமணி – 1 கப்
வெல்லம் – ½ கப்
நெய் – 2 டீஸ்பூன்
ஏலக்காய் தூள் – ¼ தேக்கரண்டி
துருவிய தேங்காய் – 3 டீஸ்பூன்.
செய்முறை:
வெல்லத்தை கரைத்து வடிகட்டவும். அடுப்பில் ஒரு கடாயில் நெய்யை சூடாக்கி, வேகவைத்த காராமணி சேர்க்கவும். வேகவைத்த வெல்லப்பாகு மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கிளறவும். பரிமாறும் முன் தேங்காய் துருவல் தூவி பரிமாறவும். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சுண்டல் இது.
2. கருப்பு கொண்டைக்கடலை மசாலா சுண்டல்
தேவையானவை:
கருப்பு கொண்டைக்கடலை – 1 கப்
சோம்பு – ¼ தேக்கரண்டி
பட்டை – சிறிய துண்டு
கிராம்பு, ஏலக்காய் – தலா 2
புதினா – சிறிது
காய்ந்த மிளகாய் – 3
துருவிய தேங்காய் – 3 டேபிள்ஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
கொண்டைக்கடலையை சுமார் 6 மணி நேரம் ஊற வைத்து குக்கரில் வேக வைக்கவும். வேகவைத்த கொண்டைக்கடலையிலிருந்து தண்ணீரை வடிகட்டவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் காய்ந்த மிளகாய், சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வதக்கி புதினா சேர்க்கவும். வெந்ததும் வேக வைத்த கொண்டைக்கடலையை தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து தேங்காய் தூவி இறக்கினால் மசாலா சுண்டல் ரெடி.