கொழும்பு: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அதிகாரப்பூர்வ பயணமாக இலங்கை சென்றுள்ளார். நேற்றுமுன்தினம் அவர் இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அநுர திஸாநாயக்கவை சந்தித்தார்.
அப்போது, இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.
இலங்கையின் அபிவிருத்திக்கு இந்தியாவின் பொருளாதார உதவி மிகவும் முக்கியமானது என அநுர திஸாநாயக்க தெரிவித்த அதேவேளை, இலங்கையின் அபிவிருத்திக்கு தேவையான அனைத்து பங்களிப்பையும் இந்தியா வழங்கும் என ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளார்.
இந்த சந்திப்பு குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தியா-இலங்கை இடையேயான உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இலங்கை மண்ணில் இந்தியாவுக்கு எதிரான எந்த நடவடிக்கையையும் அனுமதிக்க மாட்டோம் என்று திசாநாயக்க கூறினார். இலங்கையின் வளர்ச்சிக்கு இந்தியா உதவும் என ஜெய்சங்கர் உறுதியளித்தார்.
இந்த சந்திப்பின் போது, தமிழக மீனவர்கள் பிரச்னையையும் ஜெய்சங்கர் எழுப்பினார்.