புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் இணையதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-
காதி பொருட்கள் மற்றும் உள்ளூர் பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் தொடர்ந்து கேட்டு வருகிறார்.
அதன்பிறகு நாட்டில் பெரும் புரட்சி ஏற்பட்டு வருகிறது. 2-ம் தேதி காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் டெல்லி கன்னாட் பிளேஸ் பகுதியில் உள்ள ரீகல் கட்டிடத்தில் இயங்கி வரும் காதி நிலையத்தில் ரூ.2 கோடிக்கு மேல் காதி பொருட்கள் விற்பனையானது.
இது கடந்த காலத்தில் இருந்த விற்பனை அளவை விட அதிகமாகும். இது ஒரு பெரிய ஊக்கம் மற்றும் காதி பொருட்களை தயாரிக்கும் மக்களுக்கு வருவாயை அதிகரிக்க உதவுகிறது.
இவ்வாறு அமைச்சர் அமித்ஷா கூறினார்.