புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எக்ஸ் தளத்தில் நேற்று கூறியதாவது:-
நரேந்திர மோடி முதல்வராகவும், பிரதமராகவும் 23 ஆண்டுகளை பொது வாழ்வில் நிறைவு செய்துள்ளார். ஒருவன் தன் வாழ்நாள் முழுவதையும் நாட்டின் நலனுக்காகவும், பொதுச் சேவைக்காகவும் அர்ப்பணிக்க முடியும் என்பதற்கு இந்தச் சாதனை ஒரு எடுத்துக்காட்டு.
குறிப்பாக, மோடியின் 23 ஆண்டுகால பயணம், சமூக வாழ்க்கை வாழ்பவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் உத்வேகமாக உள்ளது. மோடியின் இந்த வருகையை காணும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஏழைகளின் நலன் மற்றும் மேம்பாடு, தேசிய பாதுகாப்பு மற்றும் உலகளாவிய அடையாளத்தை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் ஒரே நேரத்தில் எவ்வாறு கவனம் செலுத்த முடியும் என்பதை மோடி காட்டியுள்ளார்.
பிரச்சினைகளை துண்டு துண்டாகப் பார்க்காமல், அதற்கான தீர்வுகளை நாட்டின் முன் வைத்துள்ளார். நாட்டிற்காகவும், மக்களுக்காகவும் அர்ப்பணிப்பு உணர்வோடு, அயராது நாட்டைக் கட்டி எழுப்பி வரும் மோடியை நான் வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.