சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றுள்ள நிலையில், இன்று (அக்.8) முதல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
இன்று செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் தொழில் முதலீடுகளுக்கான சலுகைகள் மற்றும் அனுமதிகள் குறித்து ஆலோசித்து இறுதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
அந்த வகையில், முதலமைச்சரின் வருகையின் அடிப்படையில் அமெரிக்க முதலீடுகள், புதிய நிறுவனங்களில் முதலீடுகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சாம்சங் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை, செப்டம்பர் 28-ம் தேதி மாற்றியமைக்கப்பட்டது. உதயநிதி ஸ்டாலின், துணை முதல்வராக நியமிக்கப்பட்டார்.
அவருக்கு அமைச்சரவையில் 3-வது இடம் வழங்கப்பட்டுள்ளது. ராமச்சந்திரன், செஞ்சி மஸ்தான், மனோ தங்கராஜ் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
வி.செந்தில்பாலாஜி, சா.மு.நாசர், கோவி. செழியன், ஆர்.ராஜேந்திரன் உள்ளிட்டோர் இடம் பெற்றனர். புதிய அமைச்சர்கள் செப்டம்பர் 29-ம் தேதி பதவியேற்றனர்.
இதுதவிர க.பொன்முடி, தங்கம் தென்னரசு, ஆர்.எஸ்.ராஜகணப்பன், சிவ.வீ.மெய்யநாதன், மதிவேந்தன், கயல்விழி செல்வராஜ் ஆகியோரின் துறைகளும் மாற்றப்பட்டன. அவர்கள் அந்தந்த துறைகளின் அமைச்சர்களாகவும் பொறுப்பேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.