தேவையான பொருட்கள்:
பீட்ரூட் – கால் கிலோ
பாஸ்மதி அரிசி – 4 கப்
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 2
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
கொத்தமல்லி – அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை – 1 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
கொத்தமல்லி இலை – 1 கைப்பிடி அளவு
தாளிக்க:-
எண்ணெய் – தேவைக்கேற்ப
கடுகு – அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை – 1 கட்டு
செய்முறை:-
முதலில் அரிசியை தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைத்து கழுவி குக்கரில் போட்டு 8 கப் தண்ணீர் ஊற்றி சிறிது உப்பு சேர்த்து மூடி வைத்து 3 விசில் வரும் வரை வேக விடவும். பிறகு பீட்ரூட்டை துருவி, தக்காளி, வெங்காயத்தை நறுக்கி, பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறி வைக்கவும். பிறகு அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பிறகு நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பின் மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், மல்லித்தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, துருவிய பீட்ரூட்டை சேர்த்து சிறிது உப்பு சேர்த்து மூடி வைத்து வேகவிடவும். பீட்ரூட் வெந்ததும் இறக்கி சாதத்துடன் கலந்து கொத்துமல்லி தூவி பரிமாறவும். இப்போது சுவையான பீட்ரூட் சாதம் ரெடி.