சென்னை: ஆயுதபூஜை மற்றும் அடுத்தடுத்த விடுமுறையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னையில் இருந்து இன்றும், நாளையும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஆயுதபூஜை பண்டிகை மற்றும் அதைத்தொடர்ந்து விடுமுறையை முன்னிட்டு இன்றும், நாளையும் தமிழகம் முழுவதும் சென்னை மற்றும் பிற பகுதிகளில் இருந்து அதிகமான பயணிகள் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள் தினசரி பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளன.
சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூருக்கு இன்று 225 பேருந்துகளும், நாளை 880 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய பகுதிகளுக்கு இன்று 35 பேருந்துகளும், மேற்கண்ட இடங்களிலிருந்து நாளை 265 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூரில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. வானிலையிலிருந்து இன்றும் நாளையும் 110 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மேலும், ஞாயிற்றுக்கிழமையன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூருக்கு பயணிகள் திரும்ப வசதியாக அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வாரம் புதன்கிழமை 6,582 பயணிகளும், வியாழக்கிழமை 22,236 பயணிகளும், ஞாயிற்றுக்கிழமை 21,311 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். தொலைதூரப் பயணம் மேற்கொள்ளப்படுவதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
நெரிசலைத் தவிர்க்க பயணிகள் www.tnstc.in மற்றும் மொபைல் ஆப் மூலம் தங்கள் பயணத்தை முன்பதிவு செய்ய வேண்டும். இந்த சிறப்பு பேருந்து இயக்கப்படுவதை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, பயணிகள் தங்களது பயணத்திற்கு மேற்கண்ட வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.