சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் வடலூர், திண்டிவனம், சேலத்தில் நடைபெற இருந்த பாமக பொதுக்கூட்டம் டிசம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “மக்கள் விரோத திமுக அரசைக் கண்டித்து வரும் 17-ம் தேதி வடலூரிலும், 20-ம் தேதி திண்டிவனத்திலும், 26-ம் தேதி சேலத்திலும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் முக்கியப் பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளது.
இதில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பங்கேற்பதாக அறிவித்துள்ளனர்.
வரும் நாட்களில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும் என்பதால் இந்த கூட்டங்கள் ஒத்திவைக்கப்படுகிறது. இந்த பொதுக்கூட்டங்கள் டிசம்பர் இறுதியில் நடைபெறும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.