சென்னை: இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் 5 புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டங்கள் Amazon Prime, Netflix, Disney + Hot Star, Zee5 மற்றும் Sony Liv போன்ற இலவச OTT சந்தாக்களை வழங்குகின்றன.
கடந்த ஜூலை மாதம், ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணத்தை அதிகரித்து வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதற்குப் பிறகு, ஜியோ ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவுடன் இணைந்து ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தியது.
ஜியோ ரூ.949, ரூ.1028, ரூ.1029, ரூ.1,049 மற்றும் ரூ.1,299 மதிப்பிலான 5 புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இவை அனைத்தும் 84 நாட்கள் வேலிடிட்டி மற்றும் பல்வேறு ஆன்லைன் சேவைகளை வழங்குகின்றன. 5G நெட்வொர்க் கிடைக்கும் பகுதிகளில் வசிக்கும் பயனர்கள் வரம்பற்ற 5G டேட்டாவைப் பயன்படுத்தலாம்.
ரூ.949 டிஸ்னி + ஹாட்ஸ்டார் திட்டமானது இலவச குரல் அழைப்புகள், 100 எஸ்எம்எஸ் மற்றும் 168 ஜிபி 4ஜி டேட்டாவை 84 நாட்களுக்கு வழங்குகிறது. ரூ.1028 Swiggy One Lite திட்டத்தில் கூடுதலாக 3 மாதங்கள் இலவச Swiggy மெம்பர்ஷிப் மற்றும் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. 1029 பிரைம் லைட் திட்டம் 3 மாதங்களுக்கு இலவச Amazon Prime சந்தாவுடன் வருகிறது.
1049 ரூபாய் Sony Liv + Zee5 திட்டம் 3 மாதங்களுக்கு இலவச சந்தாவை வழங்குகிறது. ரூ.1,299 Netflix திட்டம் கூடுதலாக 3 மாதங்களுக்கு Netflix சந்தாவுடன் வருகிறது. இவை அனைத்தும் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ கிளவுட் போன்ற சேவைகளுக்கு இலவச அணுகலை வழங்குகின்றன.