டெல்லி: மத்திய கிழக்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள டானா புயல் கடந்த 6 மணி நேரத்தில் 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக டானா புயல் மணிக்கு 15 கி.மீ. வேகமாக நகர்ந்து கொண்டிருந்த போது, இயக்கத்தின் வேகம் சற்று குறைந்தது. மேற்கு வங்கத்தின் சாகர் தீவுகளில் இருந்து 570 கி.மீ. தொலைவில் டானா புயல் மையம் கொண்டுள்ளது.
ஒடிசாவின் பாரதீப் துறைமுகத்திற்கு 490 கி.மீ. தொலைவில், தாமரா 520 கி.மீ. புயலின் மையம் வெகு தொலைவில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.