விக்கிரவாண்டி: தவெக கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், விஜய் அவர்கள் தனது உரையில் மக்களுக்கான அரசியல் முக்கியத்துவத்தை உணர்த்தினார். “சோறு சாப்பிட்டால் தான் பசியாறும், அதை கொடுக்கிறோம்” என கூறினார்.
“மக்களின் நன்மைக்காக எதுவும் தவறில்லை” என்ற விஜய், அவர்கள் ஏற்றுக்கொண்ட அரசியல் தெளிவின் முக்கியத்துவத்தை குறிப்பிட்டார். “மாற்று அரசியல் அல்லது மாற்று சக்தி என்று நான் சொல்ல மாட்டேன்” எனவும், எக்ஸ்ட்ரா லக்கேஜ் இல்லாதே வருவேன் என உறுதியாக கூறினார்.
“நாட்டுக்கு கேடு விளைவிக்கும் ஏமாற்று இயக்கங்களுக்கு எதிராக நாங்கள் இருப்போம்” எனவும், “இங்கு வந்தவர்கள் மட்டுமல்ல, வர முடியாதோர் எங்களுடன் உள்ளனர்” என்றார்.
“தவெக சின்னத்துக்காக மக்கள் வாக்களிக்க எப்போது தயாராக இருக்கிறார்கள்” என்றும், “எங்கள் தவெகவுக்கு நாங்கள் பூசிய நிறத்தை தவிர வேறு நிறத்தை பூச முடியாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதுதான் எங்களின் கொள்கை” எனவும், கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளுக்கும் அதிகாரத்தில் பங்களிப்போம் எனவும் விஜய் கூறினார்.
மாநாட்டில் மக்கள் அவரின் பேச்சுக்கு வியந்தனர், மேலும் எதிர்கால தேர்தலுக்கான உறுதிமொழி அளிக்கப்பட்டது.