சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலும் சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் கூட்டம் அலைமோதியது. அதே நேரத்தில், விமான டிக்கெட் கட்டணம் சாதாரண நாட்களை விட 4 மடங்கு வரை அதிகரித்துள்ளது.
குறிப்பாக, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம் ஆகிய நகரங்களுக்கு விமான கட்டணம் பன்மடங்கு உயர்ந்துள்ளது. மேலும், வட மாநிலங்கள் மற்றும் அண்டை மாநிலங்களான திருவனந்தபுரம், கொச்சி, ஐதராபாத், டெல்லி, கொல்கத்தா, அந்தமான் ஆகிய இடங்களுக்கான விமானக் கட்டணமும் அதிகரித்துள்ளது.
சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு சாதாரண ஒரு நாள் கட்டணம் ரூ. 4,109. ஆனால் நேற்று ரூ. 8,976 முதல் ரூ. 13,317 மற்றும் கட்டணம் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதேபோல் மற்ற நகரங்களிலும் 4 மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. விமானக் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டாலும், தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட வேண்டும் என்ற ஒரே ஆசையில், பயணிகள் போட்டி போட்டுக்கொண்டு, விமான டிக்கெட் எடுத்து, விமானத்தில் பயணம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.