ஆனி அமாவாசை தினத்தில் பெண்கள் எளிய பரிகாரம் செய்து குடும்பத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் நீங்கி மகிழ்ச்சி கிடைக்கும். அதற்கான பரிகாரம் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
அமாவாசை இந்துக்களின் முக்கியமான விரத நாட்களில் ஒன்றாகும்.. அமாவாசை தினத்தில் விரதம் இருந்து வழிபட்டால், மறைந்த முன்னோர்களின் அருளும் ஆசியும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் இன்று ஆனி மாத அமாவாசை அனுசரிக்கப்படுகிறது. ஆனி அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்நாளில் முன்னோர்களை வழிபட்டால் அவர்களின் அருளைப் பெறலாம்.
மேலும் இன்று வெள்ளிக்கிழமையுடன் அமாவாசை வருவது சிறப்பு. குறிப்பாக புனிதமான ஆனி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமை வரும் அமாவாசை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
எனவே இன்று பெண்கள் குடும்பத்தில் உள்ள அனைத்து விதமான கஷ்டங்களும் நீங்கி மகிழ்ச்சி பெற எளிய பரிகாரம் செய்கிறார்கள். திருமணம், குழந்தைப் பேறுகளில் இருந்த தடைகள் நீங்கும். குறிப்பாக பித்ரு தோஷம், முன்னோர்களின் சாபம் நீங்கி குடும்பத்தில் நன்மைகள் பெருகும்.
அதிகாலையில் வரும் கனவுக்கு அர்த்தமா..? ஜோதிடம் என்ன சொல்கிறது..?
ஆனி மாத அமாவாசை அன்று அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு வழக்கம் போல் பித்ரு தர்ப்பணம் செய்து முன்னோர்களை வணங்க வேண்டும். முடிந்தால் கோயிலுக்குச் செல்வது நல்லது. பெண்களும் இன்று தங்கள் முன்னோர்களை வணங்கிவிட்டு இன்று மாலை 6 மணிக்கு பூஜை அறையில் தீபம் ஏற்ற வேண்டும். முதலில் குலதெய்வத்தையும், பிறகு இஷ்ட தெய்வத்தையும் வழிபடுங்கள்.
பின்னர் ஒரு தாம்பூலத்தில் 2 வெற்றிலை, 2 பாக்கு, 2 வாழைப்பழம், சில பூக்கள், மஞ்சள், குங்குமம், ஒரு ரூபாய் நாணயம் ஆகியவற்றைப் போடவும். முடிந்தால் பிளவுஸ் துணியையும் வைத்துக் கொள்ளலாம். அதேபோல், 5 தாம்பூலங்கள் தயாரித்து, குலதெய்வத்திற்கு மனதார வேண்டிக்கொள்ளுங்கள். பின்னர் வீட்டில் இறந்த பெண்களை வணங்கி, பூஜை அறையில் வைக்கப்பட்ட தாம்பூலத்திற்கு கற்பூர ஆரத்தி செய்யவும்.
வாஸ்து படி காலையில் எழுந்தவுடன் இந்த 3 பார்க்காதீர்கள்.. இல்லையென்றால் வறுமை உங்களை வாட்டும்!
பிறகு இந்த தாம்பூலத்தை 5 சுமங்கலி பெண்களுக்கு தானம் செய்ய வேண்டும். ஏழைப் பெண்களுக்குக் கொடுத்தால் மிகவும் விசேஷம்.. அல்லது கோயிலுக்குக் கூட எடுத்துச் சென்று வைக்கலாம். மிக எளிமையான இந்த பரிகாரத்தை செய்வதால் குடும்பத்தில் உள்ள அனைத்து விதமான கஷ்டங்களும் தடைகளும் நீங்கி மகிழ்ச்சி பிறக்கும் என்பது நம்பிக்கை.