ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் நடிக்கும் காதல் திரில்லர் படம் ‘காதலிக்க நேரமில்லை’. ரெட் ஜெயண்ட் தயாரித்த இந்தப் படம், பொங்கல் பண்டிகையையொட்டி வரும் 14-ம் தேதி வெளியாகிறது. படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது, ஜெயம் ரவி கூறுகையில், “இந்தப் படத்தில் நித்யா மேனனின் பெயருக்குப் பிறகு என் பெயர் இடம்பெறும்.
பலர் ஏன் என்று கேட்டார்கள். என் மீதுள்ள நம்பிக்கைதான் காரணம். என் சினிமா வாழ்க்கையில் பல விஷயங்களை நான் உடைத்துவிட்டேன். இது மட்டும் ஏன் கூடாது? ஷாருக்கான் படத்தைப் பார்த்த பிறகு இந்த முடிவை எடுத்தேன். பெண்கள் இல்லாமல், நம் உலகம் இல்லை. அவர்கள் இல்லாமல், நாம் இல்லை. இனிமேல் பெண் இயக்குநர்களின் படத்திலும் இதைப் பின்பற்றுவேன்.
எனக்கு ஒரு கஷ்டமான காலம் இருந்தது, நான் நடித்த படங்கள் நன்றாக ஓடவில்லை. என் மீது எந்தத் தவறும் இல்லாதபோது, நான் ஏன் விழ வேண்டும்? அடுத்த வருடம் எனது 3 படமும் வெற்றி பெறும். கீழே விழுவது தோல்வி அல்ல, தோல்வி என்பது எழுந்திருக்காமல் இருப்பது. இந்த வருஷம் கண்டிப்பா திரும்பி வருவேன்.” அர்ஜுன் துரை, ஒளிப்பதிவாளர் காவ்மிக் ஆரி, எடிட்டர் லாரன்ஸ் கிஷோர் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவீஸின் படக்குழுவினர் பங்கேற்றனர்.