சென்னை: Vivo Y28e 5G போன் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் போனின் சிறப்பு அம்சங்களை விரிவாகப் பார்ப்போம். இதனுடன் Y28s என்ற பெயரில் ஒரு போனும் வெளியாகியுள்ளது.
சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான Vivo, உலகளவில் தனது பிராண்டின் கீழ் போன்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. எனவே, இந்நிறுவனம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகப்படுத்துவது வழக்கம்.
அந்த வகையில், தற்போது இந்தியாவில் Y28e 5G ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போன் விவோவின் ‘ஒய்’ தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சிறப்பு அம்சங்கள்
6.56 இன்ச் HD டிஸ்ப்ளே
MediaTek Demoncity 6100 5G செயலி
ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம்
4ஜிபி ரேம்
64 ஜிபி / 128 ஜிபி சேமிப்பு
பிரதான கேமரா 13 மெகாபிக்சல்களைக் கொண்டுள்ளது
இதில் 5 மெகாபிக்சல் முன்பக்க கேமரா உள்ளது
5,000mAh பேட்டரி
இந்த போனில் 15 வாட்ஸ் சார்ஜர் உள்ளது
USB Type-C போர்ட்
இந்த போனின் விலை ரூ.10,999 முதல் தொடங்குகிறது