கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை ஏற்றத்தில் இருந்த நிலையில், நேற்று பங்குச்சந்தை சரிந்த நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் பங்குச்சந்தை சரிந்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பங்குச் சந்தை இன்று காலை சிறிது ஏற்றத்துடன் வர்த்தகம் தொடங்கியது ஆனால் சரியத் தொடங்கியது. பிஎஸ்இ தற்போது 229 புள்ளிகள் சரிந்து 79,694 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல், தேசிய பங்குச் சந்தை ஏற்றம் 56 புள்ளிகளைப் பொறுத்து 24,268 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை வீழ்ச்சியடைந்து வந்தாலும், அடுத்த வாரம் ஏற்றத்துடன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய பங்குச்சந்தையில் ஏசியன் பெயின்ட், எச்.சி.எல்.டெக்னாலஜி, ஹிந்துஸ்தான் லீவர், இன்ஃபோசிஸ், ஐ.டி.சி உள்ளிட்ட பங்குகள் ஏற்றத்திலும், ஆக்சிஸ் பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், பார்தி ஏர்டெல் ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. உள்ளிட்ட பங்குகள் சரிவில் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.