ரம்ஜான் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், தமிழக கால்நடை சந்தைகளில் ஆடு விற்பனை சூடுபிடித்துள்ளது. ரம்ஜான் பண்டிகை வரும் 31-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு கால்நடை சந்தைகளில் ஆடு விற்பனை சூடுபிடித்துள்ளது. நெல்லை மாவட்டம் வள்ளியூர் சந்தையில் காலை முதலே ஆடு விற்பனை தொடங்கியது. சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் வெள்ளை ஆடு, செம்மறி ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர்.
ஒரு ஆடு குறைந்த பட்சம் ரூ. 6000 முதல் ரூ. 40,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. ரூ.2 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் கால்நடை சந்தைக்கு மதுரை, தேனி, விருதுநகர் பகுதிகளில் இருந்து சுமார் 5000 ஆடுகள் கொண்டு வரப்பட்டன. ஆனால், இந்த ஆண்டு ஆடுகளுக்கு விவசாயிகள் அதிக விலை நிர்ணயம் செய்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், சுமார் 4 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானது.

இந்நிலையில் ரம்ஜான் பண்டிகையையொட்டி பெரம்பலூர், கிருஷ்ணகிரி, வள்ளியூர், திருமங்கலம், செஞ்சி, புதுக்கோட்டை, வேப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆட்டு சந்தைகளில் இன்று ஆடு விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. பல கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். ஆடுகள் சுமார் பல கோடிக்கு விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கிருஷ்ணகிரி மார்க்கெட்டில் இன்று மட்டும் ரூ.10 கோடி வரை ஆடுகள் விற்பனை நடந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.