பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண விழாவில் கலந்து கொண்டு சென்னை திரும்பிய ரஜினிகாந்த், தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு குறித்து கேட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் மும்பையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது இதில் தமிழ் திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். அந்த வகையில் இந்த திருமணத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டதும், திடீரென அவர் திருமணத்தில் நடனமாடிய வீடியோ ஒன்றும் இணையத்தில் வைரலானது.
திருமண விழாவில் கலந்து கொண்டு இன்று சென்னை திரும்பிய ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நிருபர் ஒருவர் தமிழக சட்டம் ஒழுங்கு குறித்த கேள்விக்கு நோ கமெண்ட்ஸ் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், அம்பானி வீட்டில் நடந்த கடைசி திருமணம் மிகவும் பிரமாண்டமாக நடந்ததாகவும், அதில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார். மேலும் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படத்தை இன்று பார்க்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.