சூர்யாவும் கார்த்திக் சுப்புராஜும் இணைந்து ஒரு படம் தயாரிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் மற்றும் சூர்யா இணைந்து தயாரித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ஷ்ரேயாஸ் கிருஷ்ணா, படத்தொகுப்பாளராக ஷபிக் முகமது அலி, ஸ்டண்ட் இயக்குநராக கேச்சா கம்பக்டே, ஆடை வடிவமைப்பாளராக பிரவீன் ராஜா ஒப்பந்தம் ஆகியுள்ளனர்.
உறியடி விஜயகுமார் வில்லனாக நடிக்கப் போவதாக கூறப்பட்டது. மேலும் ஜோஜு ஜார்ஜ், நவீன் சந்திரா, தனகரன் தமிழ், நாராயணன் ஆகியோர் நடித்துள்ளனர். கார்த்திக் சுப்புராஜின் மற்ற படங்களைப் போலவே இந்தப் படமும் கேங்ஸ்டர் கதை என்று கூறப்படுகிறது. பீரியட் படமாக உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தில் இருந்து உறியடி விஜயகுமார் விலகியுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை படத்துக்காக 8 நாட்கள் நடித்த விஜயகுமார், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் படத்திலிருந்து விலகியதாக ஒரு பேச்சு அடிபடுகிறது.