ஜெயம் ரவி நடித்துள்ள ‘பிரதர்’ படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இதில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார்.
அடுத்த படம் ‘ஜீனி’. இதில் கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா கபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அடுத்து ‘பிரதர்’ படத்தைத் தயாரித்துள்ள ஸ்க்ரீன் சீன் நிறுவனத்தின் படத்தில் நடிக்கவுள்ளார்.
இதற்கிடையில் மனைவி ஆர்த்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்த ஜெயம் ரவி மும்பையில் செட்டில் ஆகிவிட்டதாக தெரிகிறது.
சமீபத்தில் மும்பை சென்ற அவர் அங்கு தனி அலுவலகம் அமைத்து இந்தி படங்களில் நடிக்க சில நிறுவனங்களுடன் பேசி வருவதாக கூறப்படுகிறது.