தற்போது 45 வயதாகும் பிரபல நடிகை மஞ்சு வாரியர், கடந்த 1995ம் ஆண்டு வெளியான மலையாள திரைப்படம் மூலம் கலை உலகில் தனது பயணத்தை தொடங்கினார். இவர் திரையுலகில் 29 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருகிறார்.
நடிகை மஞ்சு வாரியர்
பிரபல நடிகை மஞ்சு வாரியர் சினிமாவில் சுமார் 24 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் மொழிப் படங்களில் நடிக்கத் தொடங்கினார். தனுஷின் 2019 ஆம் ஆண்டு வெளியான “அசுரன்” திரைப்படம் தமிழில் அவரது முதல் படம்.
அதன்பிறகு 2023ஆம் ஆண்டு பிரபல நடிகர் அஜித் நடிப்பில் வெளியான “துணிவு” படத்தின் மூலம் இருவருக்கும் இடையே நல்ல நட்பு உருவானது. அஜித்தின் விருப்பமான பைக் சவாரி மஞ்சுவையும் ஈர்க்கிறது.
மஞ்சு வாரியர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “வேட்டையன்” படத்தில் நாயகியாக நடித்திருக்கும் மஞ்சு வாரியர் தனது நண்பர்களுடன் பைக் பயணத்தை தொடங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், இதை கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொள்கிறேன். அவர் வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகப் பகிரப்பட்டு வருகின்றன.