லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கூலி’ படத்தில் ரஜினிகாந்த் கவனம் செலுத்தி வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் உள்ள ஆதித்யா ராம் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது. படக்குழு சண்டைக்காட்சியை படமாக்கி வருகிறது.
‘கூலி’ படத்தில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு டிசம்பர் இறுதி வரை நடைபெறவுள்ளது. அதன் பிறகு சில வாரங்கள் ஓய்வெடுக்க திட்டமிட்டுள்ளார் ரஜினிகாந்த். அதையடுத்து மீண்டும் சன் பிக்சர்ஸுக்கு தேதி ஒதுக்கியிருக்கிறார் ரஜினி.
நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர் 2’ உருவாகி வருகிறது. மார்ச் மாதம் இதன் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர். அதற்குள் நடிகர்கள் தேர்வு மற்றும் படப்பிடிப்பு தளங்கள் நடைபெறும். இதில் ரஜினி, மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்ட அனைவரும் நடிக்கும் வகையில் நெல்சன் கதையை உருவாக்கியுள்ளார்.
நெல்சன் திரைக்கதையை உருவாக்கினார், அதில் முதல் பாகத்தின் பெயரிடப்பட்ட கதாபாத்திரங்கள் மற்றும் பல காட்சிகள் இடம்பெற்றன. நெல்சன் விரைவில் ரஜினியை சந்தித்து இறுதி திரைக்கதை வடிவமைப்பை கூறுவார்.