அசோக் செல்வன் நடித்த ‘ஓ மை கடவுளே‘ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அஸ்வத் மாரிமுத்து. இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இதையடுத்து தற்போது பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘டிராகன்’ படத்தை இயக்கி வருகிறார். இது ஏஜிஎஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது. ‘டிராகன்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
டிசம்பரில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்தப் படத்துக்கு முன் அஸ்வத் மாரிமுத்து சிம்புவிடம் ஒரு கதை சொல்லியிருந்தார். ‘டிராகன்’ படத்தின் வேலைகளை முடித்துவிட்டு கதையை இயக்க முடிவு செய்துள்ளார்.
இதில் சிம்பு நடிப்பது உறுதியாகியுள்ளது. இது ஏஜிஎஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்படும். படப்பிடிப்பை உடனே தொடங்க படக்குழு முடிவு செய்துள்ளது. ‘டிராகன்’ படத்தின் வேலையைப் பார்க்கும்போது, சிம்பு நடிக்கும் படத்திற்கான மற்ற நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது.