லண்டன்: இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் லண்டனில் இயங்கி வரும் ‘டிரினிட்டி லாபன் கன்சர்வேட்டரி ஆஃப் மியூசிக் அண்ட் டான்ஸ்’ இசைக் கல்லூரியின் கெளரவத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த 5 ஆண்டுகளுக்கு அவர் இந்தப் பதவியில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் கெளரவத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள, டிரினிட்டி லாபன் இசை மற்றும் நடனக் கல்லூரி மாணவர்களுக்கு உத்வேகமாகவும், கலை வளர்ச்சிக்கும் உதவியாக இருப்பார்” என்றார்.
மேலும், இசைக் கல்லூரியின் தலைவரும் பேராசிரியருமான ஆண்டனி கூறுகையில், “ஏ.ஆர். ரஹ்மானின் தலைமையானது எங்கள் மாணவர்களின் இசை அனுபவங்களை விரிவுபடுத்தவும், புதிய கலை வடிவங்களைக் கற்றுக்கொள்ளவும் ஊக்குவிக்கும். இதுகுறித்து ஏ.ஆர். ரஹ்மான் கூறும்போது, “இந்த புகழ்பெற்ற இசைக் கல்லூரியின் கௌரவத் தலைவர் பொறுப்பை ஏற்றது எனக்குக் கிடைத்த பெருமை. நான் அதை ஒரு பெரிய பாக்கியமாக கருதுகிறேன்.