ரஜினியின் புதிய படம் நேற்று ரிலீசாகி, இதுவரை இல்லாத அளவிற்கு டல் கலெக்சனை சந்தித்துள்ளது. எப்பொழுதும் ரஜினிக்கு மாஸ் ஓபனிங் இருக்கும், ஆனால் இந்த முறை அது கொஞ்சம் டல் அடித்துவிட்டது. தமிழ்நாட்டிலும், உலக அளவிலும் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் இல்லை.
“ஜெயிலர்” படத்திற்கு இருந்த அளவிற்கு கூட, இந்த படத்திற்கு புரமோஷன் இல்லை. “ஜெயிலர்” படம் ரிலீசாகும் கடைசி இரண்டு நாட்கள் வரை நெல்சன் மற்றும் படக்குழுவினர் படத்திற்கு வளைத்து வளைத்து புரமோஷன் பண்ணினார்கள். ஆனால், இந்த படத்தில் டிஜே ஞானவேல் அதை கோட்டை விட்டுவிட்டார்.
எந்த ஒரு சேனலுக்கும் “வேட்டையன்” படத்தை புரோமோஷன் செய்யும் வீடியோ கிளிப்பிங்ஸை கொடுக்கவே இல்லை. ஹைதராபாத்தில் ஞானவேல் இந்த படத்திற்கான பைனல் மிக்சிங் வேலைகளில் ஈடுபட்டதால், சரியாக இதற்கு ப்ரோமோஷன் கொடுக்க முடியவில்லை. தமிழ்நாட்டில் மட்டும் “வேட்டையன்” படம் முதல் நாளில் 17 கோடிகள் வசூலித்துள்ளது. உலக அளவில் 60 கோடிகள் கலெக்ஷன் வந்துள்ளது. எல்லாத்துக்கும் காரணம் ரஜினி தான் என்கிறார்கள்.
அவர் அக்டோபர் 10ஆம் தேதி இந்த படத்தை ரிலீஸ் செய்தாக வேண்டும் என விடாப்பிடியாய் இருந்துள்ளார். படத்தை இயக்குநர் தீபாவளி மற்றும் அதன் பின்வரும் நாட்களில் வெளியிட திட்டமிட்டிருந்தார். மொத்தமாக தமிழ்நாட்டில் 600 ஸ்கிரீன்களில் “வேட்டையன்” படம் ரிலீஸ் ஆகியுள்ளது. மீதமுள்ள 300 தியேட்டர்களில் 150 இல் “லப்பர் பந்தும்” மற்றும் 100 தியேட்டர்களில் கார்த்தியின் “மெய்யழகன்” படம் ஓடியதால் எதிர்பார்த்த அளவு கலெக்ஷன் கிடைக்கவில்லை.