பாரீஸ் :ஒலிம்பிக் போட்டியின் இறுதிப் போட்டிக்கு சென்ற மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட், உடல் எடை அதிகரித்ததால், விதிகளின்படி தகுதி நீக்கம் செய்யப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவருக்கு பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.
சில மாதங்களுக்கு முன்பு, இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்த வினேஷ் போகட், பாஜக பிரபலம் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும் தலைவர் பொறுப்பை மாற்றக் கோரி சக மல்யுத்த வீரர்களுடன் சுமார் 40 நாட்கள் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தில் பிரதமர் மோடியையும் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பிரபல நடிகை சமந்தா சில நேரங்களில் கடினமான தடைகளை சந்திக்க வேண்டி வரும். நீங்கள் தனியாக இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். எத்தனையோ சிரமங்களுக்கு மத்தியிலும் விடாமுயற்சியுடன் செயல்படும் உங்களின் அசாத்திய திறமை உண்மையிலேயே போற்றத்தக்கது என்று கூறியுள்ளார்.