பிரபல பாடகியும் நடிகையுமான சுசித்ரா மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்துகளால் கவனத்தை ஈர்த்துள்ளார். சுசி லீக்ஸ் விவகாரத்தில் கோலிவுட் பிரபலங்கள் பலரின் தனிப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் சர்ச்சைக்குரிய தகவல்களை வெளியிட்டு கடந்த 2017-ம் ஆண்டு பரபரப்பை ஏற்படுத்திய சுசித்ரா, சமீபத்தில் இயக்குனர் செல்வராகவன் மற்றும் நடிகை ஆண்ட்ரியா குறித்து அதிர்ச்சிகரமான கருத்துகளை கூறியுள்ளார்.
இவரின் இந்த புதிய கருத்து தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சுசித்ரா கூறுகையில், ‘‘செல்வராகவனுக்கும் ஆண்ட்ரியாவுக்கும் இடையே உள்ள தொடர்பிற்கு வீடியோ ஆதாரம் இருப்பதாக சிலர் கூறியுள்ளனர்.
வீடியோ குறித்து அவர் கூறியிருந்தாலும், இது சினிமாவுக்காக உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் என்பதால் அதைப் பற்றி அதிகம் கவலைப்படவில்லை என்று கூறினார். இதனால் செல்வராகவன் – ஆண்ட்ரியா இடையே கடந்த காலங்களில் வெளியான கிசுகிசுக்கள் மீண்டும் வெளியாகியுள்ளன.
மேலும் சுசித்ரா கூறுகையில், தனுஷ் தனுஷ் எனக்கு தம்பி போன்றவர், ஆனால் அவர் என்னிடம் நல்லவர் என நினைத்தாலும், அவரது நட்புகளால் அவருக்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன” என்று கூறினார். இதனால் தனுஷ் தொடர்பான மற்ற விவகாரங்களும் மீண்டும் பேசப்படும் சூழல் உருவாகியுள்ளது.
கடந்த 2010ஆம் ஆண்டு “ஆயிரத்தில் ஒருவன்” படத்தில் செல்வராகவன் – ஆண்ட்ரியா இடையே நட்பு வளர்ந்தது. செல்வராகவன் தனது மனைவி கீதாஞ்சலியுடன் நல்ல வாழ்க்கையைத் தொடர்ந்தாலும், இப்போது சுசித்ராவின் அறிக்கைகள் அந்த பழைய சர்ச்சைகளை மீண்டும் கிளப்பியுள்ளது.
இதனால் செல்வராகவனும், ஆண்ட்ரியாவும் சமீபத்தில் வெளியில் வந்து விளக்கம் அளிப்பார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.